சபரிமலை புனிதத்தை காக்க தென்னிந்தியா முழுவதும் ரத யாத்திரை

சபரிமலை புனிதத்தை காக்க தென்னிந்தியா முழுவதும் நடைபெற்று வரும் ஐயப்ப ஜோதி ரதயாத்திரை குமரி மாவட்டத்திற்கு வந்த போது பக்தர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

சபரிமலை ஐயப்ப தர்மத்தை காக்கவும், ஆசார அனுஷ்டானங்களை காப்பாற்றவும், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட தென் இந்தியா முழுவதும் இந்த யாத்திரை ஐயப்ப சேவா சமிதி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 11ஆம் தேதி சபரிமலை சன்னதியில் இருந்து புறப்பட்ட ஜோதி நேற்று கன்னியாகுமரிக்கு வருகை தந்தபோது திரளான பக்தர்கள் பூஜைகள் செய்தும், ஆரத்தி எடுத்தும், பஜனைகள் பாடியும், சரண கோஷங்கள் எழுப்பியும் வழிபட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே