தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மாநாதரி பாரம்பரிய கேழ்வரகு விவசாயத்திற்கு மாறிய விவசாயிகள் விளைச்சல் அதிகரிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரியகுளம் பகுதியில் போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் மாநாதரி விவசாயத்தை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இருப்பினும் இந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால் குள்ளப்புரம், சில்வார்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாநாதரி விவசாயத்தை விவசாயிகள் துவங்கினர். குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் கேழ்வரகை விவசாயிகள் பயிரிட்டனர்.
கடந்த ஆண்டு கேழ்வரகு விளைச்சல் பாதிக்கப்பட்டதுடன் கிலோவுக்கு 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை மட்டுமே விலை போனது. ஆனால் தற்போது கேழ்வரகு நல்ல விளைச்சல் அடைந்துள்ளதுடன் கிலோவுக்கு 70 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.