பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது விவசாயிகளிடம் 15 நாள்களில் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரக்கோணத்தில் இன்று அதிமுக சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிக்கும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த தகவலை அளித்துள்ளார்.
தமிழகத்தில் சுமார் 16.43 லட்சம் விவவாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் ரூ.12,110 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீதுகள் 15 நாள்களில் விவசாயிகளிடம் வழங்கப்படும் என்று இன்று கூறியுள்ளார்.
ஆட்சியில் இருக்கும் போது மக்களை சந்திக்காமல், தற்போது தேர்தல் நெருங்குவதால் மக்களை சந்தித்து வருகிறார். விவாதத்துக்கு அழைத்தால் ஸ்டாலின் வரமறுக்கிறார் என்றும் முதல்வர் கூறினார்.