நாடாளுமன்றத்தில் சட்டங்கள் முறையாக திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களிடையே இன்று பேசிய பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முறையாக திரும்பப் பெறப்படும் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் கூறுகையில்,
தற்போதைக்கு போராட்டங்கள் திரும்பப் பெறப்படாது. நாடாளுமன்றத்தில் முறையாக சட்டங்களை திரும்பப் பெறும் நாள் வரை தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 11 மாதங்களுக்கு மேலாக தில்லி எல்லையில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.