ஜீ டிவி குரூப்ஸ், ஜீ ஹிந்துஸ்தான் என்கிற பெயரில் தமிழில் செய்தி சேனல் ஒன்றை புதியதாக தொடங்க இருக்கிறது. அந்த செய்தி சேனலுக்கு இன்று, (29-11-2019) தினமலர் நாளிதழில் வந்த விளம்பரம் பல முன்னணி செய்தி சேனல்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விஷயம்இதுதான் ;
நியூஸ் 18 தமிழ், தந்தி டிவி, புதிய தலைமுறை டிவி, போன்ற சேனல்களில் நடத்தப்படும் விவாதங்களில் நெறியாளர்களாக பணி புரிந்து வருபவர்கள் ‘குணசேகரன், கார்த்திகை செல்வன், மற்றும் அசோகா. இவர்களை கிண்டலடித்து ‘இவர்கள் எல்லாம் இனி இல்லை’ என்பது போல் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த விளம்பரத்தில் நேரடியாக நெறியாளர்களின் பெயரை குறிப்பிட்டு கிண்டலடித்துருப்பது தான் கேவலத்தின் உச்சம்.
இந்த செயல் சம்பந்தப்பட்ட நெறியாளர்களுக்கு மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களில் இந்த விளம்பரத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த விளம்பரத்தை வெளியிட்ட தினமலர் பத்திரிகை மீதும் கடும் விமர்சனம் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.