நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளது.
நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனை சரிசெய்ய துறை வாரியாக ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்த போதிலும், வீழ்ச்சியடையவில்லை என்று நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 4. 5 சதவீதமாக சரிவை சந்தித்துள்ளது.
முதல் காலாண்டில் 5 சதவீதமாக வளர்ச்சி சரிவடைந்த நிலையில் தற்போது மேலும் சரிவடைந்துள்ளது.
இதற்கு உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே காரணம் என்று கூறப்படுகிறது.
மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.