ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கி, வாழ்வைத் தொலைத்த இளைஞர்..!

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இறந்த வாலிபர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 28). இவர் ஆன்லைனில் ரம்மி விளையாட்டை விளையாடி வந்துள்ளார்.

மதன்குமார் கடன் வாங்கி பணத்தை ரம்மி விளையாட்டில் கட்டி இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக போலீசார் மூவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இவ்வகையான சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் இளைஞர்கள் தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது.

இந்த விளையாட்டை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே