தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு உடல்நிலை மிக கவலைக்கிடமாக உள்ளது.
தமிழக வேளாண்த்துறை அமைச்சரான துரைக்கண்ணுவிற்கு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதனைதொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உயிர் காக்கும் கருவிகளுடன் அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.