ராமர் கோயில் கட்ட செங்கல் தாருங்கள்: யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் கோயில் கட்ட ஜார்கண்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தலா 11 ரூபாயுடன் ஒரு செங்கல் வழங்க வேண்டும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஜார்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

4-ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள பகோதரில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அவர், குடியுரிமை சட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பதாகவும் அக்கட்சிகள் பாகிஸ்தான் மொழியில் பேசுவதாகவும் விமர்சித்தார்.

500 ஆண்டு கால அயோத்தி நில சர்ச்சை பிரதமர் மோடியின் முயற்சியால் முடிவுக்கு வந்திருப்பதாகவும் யோகி ஆதித்யநாத் புகழாரம் சூட்டினார்; 

விரைவில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என சூளுரைத்த யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் கட்ட ஜார்கண்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தலா 11 ரூபாயுடன் ஒரு செங்கல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே