பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் பெண்கள் தைரியமாக புகாரளியுங்கள்: குஷ்பு

திரைப்படங்களால் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக கூறுவது தவறான கருத்து என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ பேசியுள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய குஷ்பூ, பெண்கள் பாதுகாப்பில் சென்னையை போல வேறு நகரம் இல்லை என்றும் ஆனால் சென்னையிலும் பிரச்சனைகள் உள்ளதாகவும் கூறினார்.  

மேலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்றும்; தானும் காவலன் செயலியை பயன்படுத்துவதாகவும் குஷ்பூ கூறினார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே