கொரோனா வைரஸ் பற்றி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்தியால் கறிக்கோழிகளின் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்திலையில் கரூர் அருகே உள்ள கோழி பண்ணையில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட கோழிகளை உயிருடன் குழி தோண்டி புதைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த செயலுக்கு பலர் தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இது மனிதர்களின் கொடூரமான மனநிலையை காட்டுவதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிந்தன் ‘நன்றாக சமைத்து சாப்பிட்டால் கொரோனா வைரஸ் கோழி மேல் இருந்தாலும் நமக்கு வராது.’ என்றும் ‘வதந்தியால் வேளாண்குடிகள் அழிந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.