நாடு முழுவதும் தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் 150 புதிய ரயில்கள் இயக்கப்படும் என்றும்; தேஜஸ் வகை ரயில்கள் புதிதாக அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளளது.

நாடு முழுவதும் 2000 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்றும் பொருளாதார ரீதியில் பலன் பெறும் வகையில் 6000 கிலோ மீட்டர் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும்.

2023-ம் ஆண்டுக்குள் டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை – பெங்களூரு இடையே எக்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்றும் தேஜஸ் வகை ரயில்கள் மேலும் புதிததாக அறிமுகம் செய்யப்படும்.

சுற்றுலா சிறப்பு வாய்ந்த இடங்கள் தேஜஸ் வகை ரயில்கள் மூலம் இணைக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 27 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு ரயில் பாதை மின் மயமாக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், ரயில் தடங்களுக்கு அருகே சோலார் மின் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும் என்றார்.

மேலும், தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் 150 புதிய ரயில்கள் இயக்கப்படும் என்றும்; 2024-ஆம் ஆண்டுக்குள் புதிதாக 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே