ஒடிசாவில் யாஸ் புயல் கரையை கடக்க தொடங்கியது..!!

யாஸ் புயல் ஒடிசா மாநிலம் ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது.

கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று முன்தினம் இரவு மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது.

இது ஒடிசாவின் பாலசோர் பகுதியில் இருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும் பாரதீப் பகுதியில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது. பின்னர் புயலானது வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வந்தது.

இந்த புயல் தீவிரமடைந்து ஒடிசாவின் வடக்கு கடலோர பகுதியில் பாலாசோருக்கு 35 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை தீவிரமடைந்தது. தொடர்ந்து பாலாசோர் அருகே இன்று காலை 9 மணியளவில் கரையை கடக்கத் தொடங்கியது.

இதனால் அந்த பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. 155 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. புயல் கரையை கடந்து முடிக்க 3 மணிநேரம் வரை ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாஸ் புயல் காரணமாக ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே