டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும், மதுரை, திருச்சி, கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11-30 மணிமுதல் 3 மணி வரை வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.