ரமலான் மாதத்தை முன்னிட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 4 நிமிட பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் பண்டிகை தொடங்கியுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இஸ்லாமியர்கள் வீட்டில் இருந்தவாறே நோன்பை கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரமலான் மாதத்தை முன்னிட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 4 நிமிட பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யா நபி என்ற அந்த பாடலில் முகம்மது நபி அவர்கள் குறித்த வாழ்த்து இடம்பெற்றுள்ளது.
இந்த பாடல் குறித்து தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடிய “யா நபி” (Sal) புகழ்மாலையை கேட்டு மகிழுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரமலான் மாதத்தை முன்னிட்டு யுவன் வெளியிட்டுள்ள பாடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
இப்பாடல் தற்போது இப்பாடல் யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் உள்ளது.