கிரேட்டா தன்பெர்க் – மலாலா சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு வரவேற்பு

பெண் கல்விக்காக போராடி வரும் மலாலா யூசப்சாயும், பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வரும் சிறுமி கிரேட்டா துன்பெர்க்கும் லண்டனில் சந்தித்தனர்.

பிரிஸ்டல் நகரில் பருவநிலை மாறுபாடு தொடர்பாக மாணவர்களுடன் இணைந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவதற்காக, லண்டன் சென்றுள்ள கிரேட்டா அங்கு ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பயின்று வரும் மலாலாவை சந்தித்துள்ளார்.

மேலும் தனது போராட்டம் குறித்தும் அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மலாலா, கிரேட்டாவுக்காக மட்டுமே தனது வகுப்புகளை தவிர்ப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே