சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கினாரா அஜித்?

தான் எந்தவொரு சமூக ஊடக கணக்குகளையும் பயன்படுத்தவில்லை என்றும், இனி வரும் காலங்களில் இணையப்போவதும் இல்லை என்றும் நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களில் வரக்கூடிய எந்தவொரு கருத்தையும் ஆதரிக்கவில்லை என்றும்; ரசிகர்கள் பக்கத்தையும், குழுவையும் ஆதரிக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் தான் இணையப்போவதாக வெளியான கடிதம் போலியானது என்றும், தன்னால் வெளியிடப்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சமூக வலைதளம் குறித்த கருத்துக்களை பலமுறை தெரிவித்து விட்டதாகவும், நடிகர் அஜீத்குமாரின் கையெழுத்தை பயன்படுத்தி போலியாக கடிதம் வடிவமைத்த நபரை கண்டுபிடித்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே