நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு ரிட் மனு

நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் என 2017 – 2018 இந்திய மருத்துவக் கவுன்சில் இந்திய பல் மருத்துவ கவுன்சில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது.

இந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக் கோரி யாரும் நீதிமன்றத்தை நாடவில்லை.

இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் இந்திய பல் மருத்துவ கவுன்சில் சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் 2017 – 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்களின் மருத்துவ கனவு கானல் நீராகி உள்ளதாகவும் புள்ளி விவரங்களோடு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே