அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் நாளே தேர்வு எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜனவரி 2-ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக இந்த முறை ஜனவரி 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 6-ந்தேதி பள்ளிக்கு செல்லும் முதல் நாளே, பத்தாம் வகுப்புக்கு முதல் ரிவிஷன் தேர்வு நடைபெற உள்ளது.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்வு என்பதால் எந்த மாற்றமின்றி தேர்வு நடத்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் புதிதாக வழங்கப்பட உள்ளது.
புத்தகங்களை வழங்கியபின், 2 மாதத்திற்குள் பாடத்திட்டங்களை முடித்து, பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டியுள்ளது.
5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50சதவிகித கேள்விகள் 3-ம் பருவ பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாக உள்ள நிலையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.