உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70,000-ஐ தாண்டியது.
உலகளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 12,82,040 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நிலையில் 2,69,442 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 3,36,851 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 9,620 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் அதிகபட்சமாக 15,887 பேர் உயிரிழந்த நிலையில் ஸ்பெயினில் 13,055 பேர், பிரான்சில் 8,078 பேர், பிரிட்டனில் 4,934 பேர், சீனாவில் 3,331 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.