தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டம் மாறியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
அதிலும் மாநிலத்திலேயே தினமும் அதிக பாதிப்பை பதிவு செய்து வரும் சென்னையில், இதுவரை 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, சென்னையில் 25 பேரும், ஈரோட்டில் 24 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் ஒற்றை இலக்கிலேயே பாதிப்பு இருந்து வந்தது.
ஆனால் தற்போது சென்னையில் பாதிப்பு கூடிக்கொண்டே வருகிறது, ஈரோட்டில் தற்போது வரை 70 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அதில், 65 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், ஒருவர் உயிரிழந்தார்.
சிகிச்சையில் இருந்த மீதமுள்ள 4 பேரும் இன்று (ஏப்.,28) மாலை டிஸ்சார்ஜ் ஆக உள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதுமாக மீண்ட மாவட்டமாக ஈரோடு மாறியுள்ளது.
தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் 33,330 குடும்பங்களைச் சேர்ந்த 1,66,806 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பின்னர் இவர்களுக்கு கொரோனா இல்லை என்று கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்பட்டனர்.
தற்போது முழுவதுமாக மீண்ட மாவட்டமாக ஈரோடு மாறினாலும், மே 3க்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்பது தெரியவில்லை.