JUST IN : அமெரிக்க அதிபர் ட்ரம்பை பதவி நீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேறியது!

அமெரிக்க அதிபர் ட்ரம்பை பதவி நீக்கக் கோரும் இரு தீர்மானங்கள் அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.

சொந்த அரசியல் ஆதாயத்துக்காக அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் மீது பதவி நீக்கத்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

எதிர்க்கட்சியாக உள்ள ஜனநாயகக் கட்சி கொண்டு வந்த இந்த தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் 14 மணி நேரம் விவாதம் நடந்தது.

பிரதிநிதிகள் சபையில், ட்ரம்பை பதவி நீக்கக் கோரும் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 230க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். 194 உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர்.

இதனை அடுத்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடுத்தார் என்ற என்ற ட்ரம்புக்கு எதிரான 2வது தீர்மானமும் நிறைவேறியது.

பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செனட் சபையில் விவாதத்திற்கு அனுப்பப்படும்.

அங்கு விவாதத்திற்குப் பின் வாக்கெடுப்பு நடக்கும். இங்கேயும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ட்ரம்ப்பின் பதவி பறிபோகும் நெருக்கடி உள்ளது.

One thought on “JUST IN : அமெரிக்க அதிபர் ட்ரம்பை பதவி நீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேறியது!

  • I have read so many articles oor reviews on the topic of
    the blogger lovers except this post is inn fact
    a nice paragraph, keep it up.

    Reply

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே