கொரோனாவுக்கு எதிராக புதிய சிகிச்சைக்கு அங்கீகாரம் – டிரம்ப் அறிவிப்பு

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அவசரகால அனுமதி அளித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய்க்கு ரத்த பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனளிப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த சிகிச்சை தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரத்த பிளாஸ்மாவை பயன்படுத்தும் முறைக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர அங்கீகாரம் அளித்துள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 70,000 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிகிச்சை முறையால் 35 சதவீதம் இறப்புகளை குறைக்க முடியும் என அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், ‘பல உயிர்களைக் காப்பாற்றுவதற்கான சீன வைரஸுக்கு எதிரான போரில் தற்போது ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பிளாஸ்மா தெரபி நல்ல பலனை தருவதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களின் ரத்த பிளாஸ்மாவை பயன்படுத்தி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

அமெரிக்காவில் இதுவரை 58,74,146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,80,604 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே