குடியுரிமை திருத்தச் சட்டத்தில் பாஜக ஒரு அங்குலம் கூட பின்வாங்காது – அமித்ஷா உறுதி

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும்; அதிலிருந்து இம்மியளவும் பின்வாங்க மாட்டேன் எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் ஜோத்பூரில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவான விழிப்புணர்வு பிரசாரக் கூட்டத்தை உரையாற்றி அமித் ஷா தொடங்கி வைத்தார்.

அந்நிகழ்வில், காங்கிரஸ் இச்சட்டத்துக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.

மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி மக்களிடையே தவறான தகவல்களையே பரப்பி வருவதாகவும் விமர்சித்தார்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதிக்கத் தயாரா என ராகுல் காந்திக்கு சவால் விடுத்த அமித்ஷா, ராகுலுக்கு புரியும் விதத்தில் இத்தாலிய மொழியில் குடியுரிமை திருத்த சட்டத்தை மொழிபெயர்க்கவும் தயார் என குறிப்பிட்டார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த எடுக்கும் முயற்சியில் இருந்து எக்காரணம் கொண்டும், இம்மியளவும் பின்வாங்கப் போவதில்லை, எனவும் அமித்ஷா கூறினார்.

மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை, திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை எனவும் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல எனவும் மாறாக குடியுரிமை அளிப்பதற்காகவே எனவும் கூறினார்.

மேலும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இந்திய முஸ்லீம்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் அமித்ஷா தனது உரையில் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே