பெண்கள் உலக கோப்பை : ஆஸ்திரேலியாவுக்கு 133 ரன்கள் இலக்கு..

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியதால் 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

ஐசிசி உலகக் கோப்பை தொடர ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா களமிறங்கினார்.

சொந்த மண்ணில் விளையாடுவதால் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.

இந்திய வீராங்கனைகள் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

மந்தனா 10, வர்மா 29, கேப்டன் கவுர் 2 ரன்னிலும் அவுட்டாகினர். இந்திய அணி 47 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறியது.

4வது விக்கெட் ஜோடி சேர்ந்த சர்மா – ரோட்ரிக்ஸ் சற்று நிதானமாக விளையாடினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது.

சர்மா அதிகபட்சமாக 49 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே