ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இணை சாம்பியன் பட்டம் வென்றது.

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா மற்றும் உக்ரைன் நாட்டு வீராங்கனை நாடியா கிச்செனோக், சீனாவை சேர்ந்த Zhang Shuai மற்றும் Peng Shuai ஜோடியை எதிர்க்கொண்டனர்.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சானியா இணை எதிரணிக்கு வாய்ப்புகளை கொடுக்காமல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியாக சானியா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சீனா வீராங்கனைகளை வீழ்த்தி தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது.

காயம் மற்றும் குழந்தை பெற்றது காரணமாக இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் களம் கண்ட சானியா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே