தயாநிதி மாறனுக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

நாளிதழில் கடந்த 31ஆம் தேதி வெளியான செய்தியில், டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஜெயகுமாருக்கு தொடர்பு இருப்பதாகவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் உண்மை வெளிவரும் என்றும் தயாநிதிமாறன் கூறியதாக கூறப்பட்டு இருந்தது. 

இதுதொடர்பாக  அமைச்சர் சார்பில் சென்னையில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

அதில் தயாநிதி மாறன் ஆதாரம் இல்லாமல் உண்மைக்கு புறம்பாக உள்நோக்கத்துடன் பேசியுள்ளதாகவும், அவர் மீது அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே