கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு டென்னிஸ் தொடர்கள் ரத்தாகின.

ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன், வரும் செப்., வரை தள்ளி வைக்கப்பட்டது.

லண்டனில் வரும் ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்க இருந்தது.

தற்போது இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

இதனால் விம்பிள்டன் டென்னிஸ் நடப்பது சந்தேகமாக இருந்தது.

இதனிடையே பாரம்பரியமிக்க விம்பிள்டன் தொடரை ரத்து செய்வது என, ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ், குரோகொயட் கிளப் (ஏ.இ.எல்.டி.சி.,) முடிவு செய்தது.

இதுகுறித்து ஏ.இ.எல்.டி.சி., வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,’ வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, 134வது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்படுகிறது. இதற்காக வருத்தப்படுகிறோம்,’ என தெரிவித்தது.

அத்துடன், 134-வது தொடர் 2021-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

கடந்த 1915 முதல் 1918 வரை முதல் உலகப் போர், 1940 முதல் 1945 வரை இரண்டாவது உலகப் போரின் போது விம்பிள்டன் டென்னிஸ் நடக்கவில்லை.

இதன் பின் தற்போது இத்தொடர் ரத்தாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே