#WFH : வீட்டில் அலுவலகப் பணி.. இருந்தாலும் உற்சாகமாக இருக்க என்ன செய்வது..?

வீட்டிற்குள்ளேயே அடைந்திருப்பது மனதளவில் பாதிப்பை உண்டாக்கலாம். இதற்கிடையில் அலுவலகப் பணியின் அழுத்தம். இவற்றை சமாளிப்பதே பெரும் போராட்டம்தான்.

இருந்தாலும் உங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள இந்த விஷயங்களை மட்டும் செய்யத் தவறாதீர்கள்.

வீட்டில் இருந்தாலும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி, நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் C சத்து அடங்கிய காய்கறிகள், பழ வகைகளை சாப்பிடுங்கள்.

உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு மனதிற்கும் ரிலாக்ஸாக இருக்கும் உடற்பயிற்சியை வீட்டிற்குள்ளேயே செய்யுங்கள்.

இன்டர்நெட்டை சிறிது நேரம் அணைத்து விட்டு பழைய நினைவுகளை மனதில் அசைபோட்டு பாருங்கள்.

குறைந்தபட்ச உறக்கமான எட்டு மணி நேர உறக்கத்தை மறந்துவிடாதீர்கள்.

மன ஓய்வுக்காக உங்கள் சரும அழகைப் பராமரிக்கவும் நேரம் ஒதுக்குங்கள்.

மெலோடி பாடல்களை நேரம் ஒதுக்கி கேளுங்கள். மன அமைதியை தரும்.

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

வேலை, பணம் என்று இதற்கு பின்னாடியே இவளோ காலம் ஓடி விட்டீர்கள். இந்த விடுப்பை பயனுள்ளதாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே