நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்தினால் டெல்லியின் காற்று மாசு குறைந்துவிடுமா? – கவுதம் கம்பீர்

நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்தினால் டெல்லியின் காற்று மாசு குறைந்துவிடும் என்றால் அதை நிறுத்தத் தயார் என்று டெல்லி எம்.பி. கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

டெல்லி மாசு குறித்து ஆலோசிக்க கடந்த வாரம் நடைப்பெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தூரில் நடந்த கிரிக்கெட் போட்டியின் வர்ணனைக்கு சென்ற கவுதம் கம்பீர் அங்கு ஜிலேபி சாப்பிடும் புகைப்படம் வெளியானது.

இதற்கு கடும் விமர்சனம் எழுந்தது.

இந்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், டெல்லியில் கவுதம் கம்பீரை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

நாடாளுமன்ற வளாகத்தில் இது குறித்து விளக்கம் அளித்த கம்பீர், ஜனவரி மாதம் செய்த ஒப்பந்தப்படி கிரிக்கெட் பணிக்காக சென்றதாகவும், ஏப்ரலில்தான் எம்பி ஆனேன்.

என்ன ஏதென்று தெரியாமலேயே 10 நிமிடங்களுக்குள் விமர்சித்த டுவிட்டர்வாசிகள் இதுபோல் மாசை குறைப்பதிலும் ஆர்வம் காட்டியிருந்தால் டெல்லி இந்நேரம் சுத்தமாக இருந்திருக்கும்.

நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்தினால் டெல்லியின் காற்று மாசு குறைந்துவிடும் என்றால் அதை நிறுத்தத் தயார் என்றும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே