ஜே.என்.யூ தாக்குதல் சம்பவம் – அனுராக் காஷ்யப், டாப்ஸி கண்டனம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் அனுராக் காஷ்யப், டாப்ஸி பானு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக் கட்டண உயர்வை எதிர்த்து கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக போராடிவருகின்றர். கு

டியுரிமை திருத்தச் சட்டம் விவகாரம் எழுவதற்கு முன்னதாக டெல்லியில் விடுதிக் கட்டண உயர்வுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தினர்.

இந்தநிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

மேலும், மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டவர்களையும் கடுமையாகத் தாக்கினர்.

அந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மும்பையில் கேட்டர் சாலையில் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தப் போராட்டத்தில் பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி, சோயா அக்தர், அனுபவ் சின்ஹா, கவுஹர் கான் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே