முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு பல்வேறு அறிவிப்புகள் மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல், புதிய தொழில் முதலீடுகள், ஏழைத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ.2000 நிதியுதவி அளிக்கும் திட்டம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆய்வுக்கு எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

10 நாட்களுக்கு பின்பு மீண்டும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே