கணவர் பிரியாணி வாங்கி தராததால், மனைவி தீ குளித்து தற்கொலை…!!

மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி பகுதி.. இங்கு ஒரு வீட்டில் குடியிருந்து வரும் தம்பதி மனோகரன் – சவுமியா.. 2 குழந்தைகள் உள்ளனர்..

இந்நிலையில் கடந்த புதன்கிழமை மனோகரன் வீட்டை விட்டு வெளியே கிளம்பி வந்தார்.. அப்போது, அவரது வீட்டு ஹவுஸ் ஓனர், தனக்கு ஒரு பிரியாணி வாங்கி வருமாறு சொல்லி பணமும் தந்தார்.

இதை பார்த்த சவுமியாவும், தனக்கும் ஒரு பிரியாணி வேண்டும் என்று கேட்டார்.. ஆனால் மனோகரன் தன்னிடம் பணம் இல்லை, அப்பறமா வாங்கி தருவதாக சொல்லி உள்ளார்..

எனினும் வீட்டுக்கு வரும்போது, குஸ்கா வாங்கி வந்துள்ளார்.. குஸ்காவை பார்த்ததும் டென்ஷன் ஆகிவிட்டார் சவுமியா.. இதுதான் மெல்ல மெல்ல சண்டையாக மாறியுள்ளது.

தம்பதிக்குள் வாக்குவாதம், தகராறு என வீட்டிற்குள் பூகம்பமே வெடித்தது.

கடைசியில் ஆத்திரமடைந்த சவுமியா, மனோகரனின் பைக்கில் இருந்த பெட்ரோலை பிடித்து கொண்டு, மொட்டை மாடிக்கு எடுத்து சென்று உடம்பில் ஊற்றி தீயையும் வைத்து கொண்டார்.

உடம்பெல்லாம் பற்றிய எரிய அலறி துடித்தார் சவுமியா.. இதை பார்த்து கதறிய மனோகரன், சவுமியாவை மீடடு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்..

ஆனால் 80 சதவீதம் உடம்பில் தீ பிடித்துவிட்டது.. தகவலறிந்து போலீசார்இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டனர்.

தீவிர சிகிச்சையில் இருந்த சவும்யா, “எப்படியாவது அவர் என்னை காப்பாத்திடுவார்னு நினைச்சுதான் பெட்ரோலை ஊத்திக்கிட்டேன், அவசரப்பட்டுட்டேனே” என்று கதறி அழுதார்..

இதையடுத்து சிகிச்சை பலனின்றி சவுமியா இறந்துவிட்டார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே