சாத்தான்குளம் சம்பவம் : சினிமா பிரபலங்கள் ஆதங்கம்

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். அவற்றின் தொகுப்பு இதோ…

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய தந்தை, மகன் ஆகிய இருவரும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையைத் திறந்ததாக விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் அங்கு போலிஸார் கடுமையாக தாக்கியதால் இருவரும் அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக மரணம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இது குறித்து பல சினிமா பிரபலங்கள் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

அவற்றின் தொகுப்பு இதோ…

குஷ்பூ:

எந்தவித தாமதமும் இன்றி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு சட்டத்தின் அடிப்படையில் நீதி கிடைப்பதை நாம் காண முடியுமா? குற்றவாளிகள் தப்பி விடக் கூடாது. தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியே.

கார்த்திக் சுப்புராஜ்:

சாத்தான்குளத்தில் நடந்தது கொடூரமானது. மனிதநேயத்தை அவமதிக்கும் செயல். குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த ஏழை ஆத்மாக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில மனிதர்கள் வைரஸ்களை விட ஆபத்தானவர்கள்.

பா. ரஞ்சித்:

டி.இமான்:

அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களை கேட்பதற்கே அதிர்ச்சியாக உள்ளது. முழுக்க, முழுக்க மனிதத்தன்மையற்ற ஏற்றுக்கொள்ளவே முடியாத தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது. இந்த இரக்கமற்ற நடைமுறைக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இந்தியாவின் ஜார்ஜ் ஃபிளாய்ட்.

ஜெயம்ரவி:

சட்டத்திற்கு உட்படாதவர்கள் யாருமில்லை. இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்

சாந்தணு:

ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு நடந்தது அநீதி என்றால் தூத்துக்குடியில் இன்றைக்கு நம்ம ஆளு ஒருத்தருக்கும் இதே நடந்திருக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே