கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

சாத்தான்குளத்தில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த தந்தை – மகனின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிதி வழங்குவதாக சற்று முன்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து தற்போது அதிமுகவும் 25 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சாத்தான்குளம்‌ சம்பவத்தில்‌ மரணமடைந்த திரு. ஜெயராஜ்‌, திரு. பென்னிக்ஸ்‌ குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ 25,00,000/- ரூபாய்‌ குடும்பநல நிதியுதவி வழங்கப்படும்‌.

தாத்துக்குடி மாவட்டம்‌. சாத்தான்குளத்தில்‌ காவல்‌ துறையினரால்‌ விசாரணைக்கு அழைத்துச்‌ செல்லப்பட்ட திரு. ஜெயராஜ்‌ மற்றும்‌ அவரது மகன்‌ திரு. பென்னிக்ஸ்‌ ஆகியோர்‌ மரணமடைந்த துயர நிகழ்வு துரதிருஷ்டவசமாளதும்‌, மிகவும்‌ வேதனைக்குரியதுமாகும். இத்தகைய வேதனை அளிக்கும்‌ சம்பவங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ ஒருபோதும்‌ அனுமதிக்காது.

குடும்பத்தின்‌ இரண்டு தூண்களாய்‌ இருந்த தந்தையையும்‌, மகனையும்‌ இழந்து வாடும்‌ அக்குடும்பத்தினருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ தனது ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறது.

திரு, ஜெயராஜ்‌, திரு. பென்னிக்ஸ்‌ ஆகியோரது ஆன்மா இறைவன்‌ திருவடி நிழலில்‌ இளைப்பார எல்லாம்‌ வல்ல இறைவனைப்‌ பிரார்த்திக்கிறோம்‌.

தமிழக மக்களின்‌ அடைக்கலமாகவும்‌. அரணாகவும்‌ திகழும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ பாதிக்கப்பட்‌ட குடும்பத்திற்கு 25 லட்சம்‌ ரூபாய்‌ குடும்பநல நிதியுதவி வழங்கப்படும்‌.

தமிழ்‌ நாட்டு மக்களின்‌ நலனுக்காகவே அல்லும்‌ பகலும்‌ அயராது உழைத்து வரும்‌ மாண்புமிகு அம்மா அவர்களின்‌ நல்லாசியோடு செயல்பட்டு வரும்‌ கழக அரசும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகமும்‌ என்றென்றும்‌ மக்களின்‌ நம்பிக்கைக்குரிய வகையில்‌ பணியாற்றி, நீதியை நிலைநாட்டும்‌ என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்‌.

இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே