கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மேலும், இந்த விபத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து ஏற்பட்டதையடுத்து, அனல் மின் நிலையம் முழுவதும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து 13 பேர் பலியான நிலையில் மற்றொரு விபத்தானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.