இந்திய இஸ்லாமியர்கள் மற்ற நாட்டு இஸ்லாமியர்களுக்காக ஏன் போராட வேண்டும்.? – ராஜேந்திர பாலாஜி

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் போராட்ட களங்களில் வன்முறை மூண்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது, தமிழர்களையும் தமிழர் உணர்வுகளையும் முதல்வர் பழனிசாமி ஒருபோதும் அடமானம் வைக்க மாட்டார் என்றும்;

மோடியின் தலைமை இந்தியாவுக்கும், எடப்பாடி பழனிச்சாமி தலைமை தமிழகத்திற்கும் தேவை என்றும்;

மோடியால் இந்தியா இந்தியாவாக உள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுத்துவதை திமுக தவிர்க்க வேண்டும் எனவும்;

இந்திய இஸ்லாமியர்கள் மற்ற நாட்டு இஸ்லாமியர்களுக்காக ஏன் போராடுகிறார்கள்?? என கேள்வி எழுப்பினார்.

மேலும், பிரதமர் மோடி என்ற வீரன் கையில் நாடு உள்ளதால் தான் இந்தியா இந்தியாவாக உள்ளது என இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்திற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டங்களை தெரிவித்த வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே