ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் தன்னை பற்றிய விவரங்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்து சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் அவர்கள் ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன் படி கடந்த 2017ம் ஆண்டு பிப்.15ம் தேதி சசிகலா உள்ளிட்ட 2 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறை விதிகளின் படி, சசிகலா கடந்த ஆண்டே வெளியாகி இருக்க வேண்டும் என கூறப்பட்ட நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இதனையடுத்து நீதிமன்றம் விதித்த ரூ.10 கோடி அபராதத்தை செலுத்த சசிகலா மனு அளித்திருப்பதாகவும் வரும் ஜனவரி மாதம் 27ம் தேதி வெளியாக உள்ளதாகவும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நரசிம்ம மூர்த்தி என்பவர் கேட்ட கேள்விக்கு கர்நாடக சிறைத்துறை பதில் அளித்தது.
இதனிடையே, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், சசிகலாவை வெளியே எடுக்க டிடிவி தினகரன் முனைப்பு காட்டி வருகிறார்.

இந்த நிலையில், ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் தன்னை பற்றிய விவரங்களை 3ஆம் நபருக்கு வழங்கக் கூடாது என சசிகலா கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகிறது.
வழக்கில் தொடர்பு இல்லாத 3ஆவது நபர் விளம்பர, அரசியல் நோக்கில் விவரங்களை கேட்பதால் விவரங்களை அளிக்க கூடாது என சசிகலா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், சசிகலா விடுதலை பற்றி நரசிம்ம மூர்த்தி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.