2019-ல் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின் பிரிவு 35-ன்படி எந்தவொரு தனி நபரையும் தீவிரவாதி என முத்திரை குத்த முடியும். யுஏபிஏ சட்டத்தின்படி ஒரு அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பு எனக்கூறும்போது, அந்த அமைப்புக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பு கூட தனி மனிதனுக்கு இல்லை.
தனிநபர் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த, யுஏபிஏ சட்டம் கடந்த 1967-ல் கொண்டுவரப்பட்டது.
நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக நடைபெறும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்குவதுதான் இந்த சட்டத்தின் நோக்கம்.
தீவிரவாத செயலுக்காக ஆட்களை யார் தேர்ந்தெடுத்தாலும், அவர்கள் மீது இந்த சட்டம் பாயும். இச்சட்டப்படி ஒருவர் மீது, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும்.
கருப்பு சட்டம்.. –
யுஏபிஏ சட்டம் குறித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், திமுக எம்பியுமான பி.வில்சன் கூறியதாவது: யுஏபிஏ சட்டத்தை இன்றைக்கும் கருப்பு சட்டமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
2019-ல் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின் பிரிவு 35-ன்படி எந்தவொரு தனி நபரையும் தீவிரவாதி என முத்திரை குத்த முடியும். யுஏபிஏ சட்டத்தின்படி ஒரு அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பு எனக்கூறும்போது, அந்த அமைப்புக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பு கூட தனி மனிதனுக்கு இல்லை.
பழைய சட்டத்தில் டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத சிபிஐ அதிகாரிகள் மட்டுமே வழக்குப்பதிவு செய்ய முடியும். ஆனால் தற்போது தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) இந்த பொறுப்பை ஒப்படைத்து வானளாவிய அதிகாரத்தை தந்துள்ளனர்.
இதனால் தற்போது ஆய்வாளர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள அதிகாரிகள் கூட விசாரிக்க முடியும். இந்த சூழலில் விசாரணையின் தரம் சரியாக இருக்காது. எனவே தான் இந்த சட்டத்தை எதிர்த்து, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு இந்த விவகாரத்தை அனுப்ப வேண்டுமென கடந்த ஆகஸ்ட் மாதம் திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் நானே குரல் கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.