பிரச்சனைகளை திசை திருப்பவே, குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது : கனிமொழி

பிரச்சனைகளை திசை திருப்பவே, குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, சென்னை சைதாபேட்டையில் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில், திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்று பேசினார்.

அப்போது, பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருவதாக கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கனிமொழி தெரிவித்தார். 

வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை, என பல பிரச்னைகள் இருக்கும்போது, குடியுரிமை சட்டம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டதாக தெரிவித்த அவர், டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில், அரசால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். 

மேலும், பிரதமர் மோடிக்கு இரண்டு விஷயம் தான் தெரியும், ஒன்று பாகிஸ்தான், மற்றொன்று நேரு என்றும் மற்றவை பற்றி அவர் பேசுவதில்லை என்றும் கனிமொழி குறிப்பிட்டார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே