ஹரியானாவில் ஆட்சி அமைக்கப்போவது யார் ?

ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை எந்த கட்சியும் பெற முடியாத சூழல் நிலவுகிறது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் காங்கிரஸ் கட்சியும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

பாரதிய ஜனதா 35க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதனிடையே கடந்த ஆண்டு துவங்கப்பட்ட ஜனதா கட்சி 12 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இதனால் ஹரியானாவில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை நிர்ணயம் செய்வதில் ஜனநாயக ஜனதா தளத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பான்மைக்கு 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பாஜக எதிர்பார்த்த அளவு முன்னிலை வகிக்காத போதிலும், சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே