நாங்குநேரி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணனைவிட, சுயேச்சை வேட்பாளரான பனங்காட்டுப்படை மக்கள் கட்சியின் ஹரி நாடார் 519 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த அக்.21-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் சார்பில் ராஜநாராயணன் ஆகியோர் களம் கண்டனர்.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மொத்தம் 22 சுற்றுகளில் எண்ணப்படுகின்றன.
இதுவரை 11 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது.
11-வது சுற்று முடிவில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணனை விட, சுயேச்சை வேட்பாளரான பனங்காட்டுப்படை மக்கள் கட்சியின் ஹரி நாடார் 519 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
11-வது சுற்றில் அதிமுக வேட்பாளர் 52,613 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 35,420 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
அதிமுக வேட்பாளர் 17,193 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.