நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றி பெற்றுள்ளார். 

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவின் நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரூபி மனோகரன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் ஒரு லட்சத்து 70,674 பேர் வாக்களித்தனர். 66.35 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

22 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 94,802 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், 61,991 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே