யாரெல்லாம் சுங்கக் கட்டணம் செலுத்த தேவையில்லை…?

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் இருந்து பலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் சாலைகளை பயன்படுத்துவதற்காக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்காக குறிப்பிட்ட தூர இடைவெளிகளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனினும், இதில் கட்டணம் செலுத்துவதில் இருந்து பலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  • குடியரசுத்தலைவர்,
  • துணைக்குடியரசுத்தலைவர்,
  • பிரதமர்,
  • மாநில ஆளுநர்கள்,
  • தலைமை நீதிபதி,
  • மக்களவை சபாநாயகர்,
  • மத்திய அமைச்சர்கள்,
  • மாநில முதல்வர்கள்,
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,
  • மாநில அமைச்சர்கள்,
  • துணை நிலை ஆளுநர்கள்,
  • முப்படை தளபதிகள்,
  • சட்டப்பேரவை சபாநாயகர்,
  • உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும்
  • நீதிபதிகள்,
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும்,

  • ராணுவ கமாண்டர்,
  • தலைமைச் செயலாளர்கள்,
  • மத்திய துறைச் செயலாளர்கள்,
  • மக்களவை & சட்டசபை செயலாளர்கள்,
  • இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு தலைவர்கள்,
  • சட்டமன்ற மேலவை & சட்டப்பேரவை உறுப்பினர்கள்,
  • பரம் வீர் சக்ரா, அசோக் சக்ரா, மஹா வீர் சக்ரா, கீர்தி சக்ரா, வீர் சக்ரா விருது வென்றவர்கள் ஆகியோர் அடையாள அட்டையை காட்டிச் செல்லலாம்.
  • பாரா மிலிட்டரி படைகள்,
  • மாஜிஸ்திரேட்,
  • தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம்,
  • தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய பணி வாகனம்,
  • சடலங்களை எடுத்துச் செல்லும் வாகனம் ஆகியவற்றுக்கு விலக்கு உள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் தங்களது வசதிக்கேற்ப வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கும் கட்டண விலக்கு உள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே