குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், வடகிழக்கு மாநில மக்களின் கலாச்சாரம், மொழி, சமூக அடையாளம் மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடக் கூறி இருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வன்முறையை தூண்டி விடுவது காங்கிரஸ்தான் என்று குற்றஞ்சாட்டினார்.
இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேறியது காங்கிரஸ் கட்சியினரை வயிற்றெரிச்சல் பட வைத்திருப்பதாகவும்; அதை பொறுக்க முடியாமல் போராட்டங்களை நடத்த அந்த கட்சி தூண்டி வருகிறது என்றும் விமர்சனம் செய்தார்.
அசாம் மற்றும் வடகிழக்கு மாநில மக்களின் கலாச்சாரம் சமூக அடையாளம் மொழி மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிக்கப்படாது என்றும்; அவை அனைத்தும் அப்படியே பாதுகாக்கப்படும் என்றும் அமித்ஷா உறுதி அளித்தார்.