தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று முதல் அமல்..!!

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இன்று முதல் 2025 ஜூன் 30ம் தேதி வரை 4 ஆண்டு காலத்துக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில் 203 வகை சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே