மீனவர்கள் கடலுக்கு செல்லவும், மீன்களை விற்கவும் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் கோடிக்கணக்கானோர் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் மீன் பிடிப்பு மற்றும் மீன்வளர்ப்பு தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி மீனவர்கள் கடலுக்கு செல்லவும் , மீன்களை விற்கவும் அனுமதி அளிப்பதாக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடலில் மீன் பிடித்தல், மீன் தொழில் மற்றும் அதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.