தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
அதன்படி 9 மாவட்டங்கள் தவிர, மற்ற 27 மாவட்டங்களுக்கு திட்டமிட்ட தேதியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள, முதல் வேட்பாளர் பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டது.
இந்நிலையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து 14 மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை, அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.
பிறமாவட்டங்களில் திமுக தலைமையில் போட்டியிடும் தோழமை கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் பிற மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.