மாமல்லபுரம் கடற்கரையை சுத்தம் செய்யும் போது தன் கையில் இருந்தது அக்குபிரஷர் கருவி என பிரதமர் மோடிக்கு விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 12ஆம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். முன்னதாக அன்றைய தினம் அங்கு உள்ள கடற்கரைப் பகுதிகளில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது கழிவுகளை அப்புறப்படுத்தினார்.
அப்போது அவர் தமது கையில் கருவி ஒன்று வைத்திருந்தார். இது குறித்து ட்விட்டரில் பலர் கேள்வி எழுப்பினர்.
தற்போது இது பற்றி டுவிட்டரில் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது தமது கையில் வைத்து இருந்தது அக்குபிரஷர் கருவி என்றும், அது தமக்கு பெரிதும் உதவியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.