சிக்னல் மெசேஜிங்க்கு மாறிய வாட்ஸ்அப் பயனர்கள்.. !!

உங்களது தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது செயலியை அழித்துவிடுங்கள் என்று வாட்ஸ்ஆப் கெடுபிடி காட்டுவதால், ஏராளமான பயனாளர்கள் அதற்கு மாற்றாக டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கு மாறுவது அதிகரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வாட்ஸ்ஆப் பயனாளிகள் பலரும் டெலிகிராம் உள்ளிட்ட ஆப்களுக்கு மாறி வருவதாகவும், தற்போது அது அதிகரித்திருப்பதாகவும் டெலிகிராமின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.

சுமார் 50 கோடி பயனாளர்களைக் கொண்டிருப்பதோடு, தொடர்ந்து இது அதிகரித்து வருவதாகவும், பேஸ்புக் நிறுவனத்தின் மிகப்பெரிய சவாலாக டெலிகிராம் உருவாகியுள்ளது என்றும் துரோவ் கூறியுள்ளார்.

தரம் மற்றும் தனிநபர் உரிமையில் டெலிகிராமுடன் போட்டியிட முடியாத பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்ஆப், இணையதளம்வாயிலாக தவறான தகவல்களை பரப்பி வருகிறது. டெலிகிராம் பற்றி தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பியிருப்பதை கண்டறிந்துள்ளோம்.

அனைத்து பயனாளர்களும் தங்களது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் வாட்ஸ்ஆப் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதை பெரும்பாலான பயனாளர்கள் ஏற்காமல், அதிலிருந்து வெளியேறி வருகிறார்கள்.

பேஸ்புக் நிறுவனம் பல லட்சங்களை சந்தைப்படுத்துதலுக்காக செலவிட்டு வருகிறது. ஆனால் டெலிகிராம் சந்தைப்படுத்துதலுக்காக எந்தத் தொகையையும் செலவிடுவதில்லை.

மக்கள் தற்போது புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறந்தது எது என்று தெரிந்து அதனை தேரிவு செய்கிறார்கள்.

அதனால்தான் 50 கோடி மக்கள் டெலிகிராமை பயன்படுத்துகிறார்கள் என்றும் துரோவ் கூறியுள்ளார்.

தற்போது செல்லிடப்பேசி எண்ணை சரிபார்க்கும் முறையானது சிக்னல் ஆப்பில் தாமதமாவதாகவும்; ஒரே நேரத்தில் அதிகமானோர் வெரிஃபிகேஷன் செய்வதால்தான் அவ்வாறு நடப்பதாகவும்; அதிகமானோர் சிக்னல் செயலியை நாடுவதால், உடனடியாக அதிலிருக்கும் குறைகள் சரி செய்யப்படும் என்றும் சிக்னல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முயற்சித்து முடியாமல் போனவர்கள் மீண்டும் முயற்சித்தால் செயலியை பயன்படுத்த இயலும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே